No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

வாழ்வின் கடைசி நிமிடம் வரை ஒரு நபர் மனமாற்றம் பெறமுடியும். எனவே, மரணதண்டனை என்பது மனிதனின் மீற முடியாத தன்மையையும், மாண்பையும் பாதிப்படையச் செய்யும். அதனால் அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”  

- அக்டோபர் 10, மரணதண்டனை குறித்த குறுஞ்செய்தி

போர்களை விரும்புகின்ற, அவற்றை வழிநடத்துகின்ற, தேவையில்லாமல் நீடிக்கின்ற, அதில் இலாபத்தைச் சம்பாதிக்கின்ற மனிதர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்.”

- அக்டோபர் 12, குறுஞ்செய்தி

உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே.”

- அக்டோபர் 13, ஞாயிறு மூவேளைச் செப உரை

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு அருளடையாளத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தி, நாம் வாழ்கின்ற இந்தப் பொதுவான உலகிற்கான நன்மைக்காக உழைக்கும்போது கிறிஸ்துவின் மறைப்பணியினை ஆற்றும் அவரின் சீடர்களாக மாறுகின்றோம்.”

- அக்டோபர் 11, கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிப்பாட்டில் மறையுரை

திரு அவையில் பணியாற்றும் கர்தினால்கள் தங்களது பார்வையை உயர்த்துதல், நீடித்தல், இதயத்தை விரிவுபடுத்துதல் மிக அவசியம். இதன் வழியாக உலகளவில் அனைவரையும் தீவிரமாக அன்பு செய்ய முடியும்.”

- அக்டோபர் 12, புதிய கர்தினால்களை உரோமைக்கு அழைக்கும் கடிதம்

Comment