No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள்,  மேலும் சுற்றறிக்கைகளின்  இரத்தினச் சுருக்கம்

உலகின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலமாகத் திகழும் இளையோர் அனைவரும் திரு அவையின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் கதாநாயகர்கள்.”

- நவம்பர் 27,  அகில உலகக் கத்தோலிக்க இளைஞர்களுக்கான செய்தி

மானிட மகன் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அரசரான நம் கிறிஸ்து, மிகவும் பலவீனமான பெண்களிலும், ஆண்களிலும் தமக்குப் பிடித்த சகோதரிகளையும், சகோதரர்களையும் காண்கிறார். துயருறுவோர் மற்றும் தேவையிலிருப்போர் மத்தியில்தான், அவரின் அரச நீதிமன்றம் செயல்படுகிறது.”

- நவம்பர் 26, ஞாயிறு மூவேளைச் செப உரை

நமது உதவி மற்றும் தோழமை தேவைப்படும் மக்களுக்குப் பணியாற்றுவதன் வழியாக, அவர்களைப் புறக்கணிக்காமல், அவர்களுக்கு  உணவு, தண்ணீர், உடை, தங்குமிடம் மற்றும் உடனிருப்பு ஆகியவற்றை வழங்குபவர்களே உண்மையில் பேறுபெற்றவர்கள்!”

- நவம்பர் 26, ஞாயிறு மறையுரை

கத்தோலிக்கர்கள் சமூகத் துறையில் தெளிவு மற்றும் உறுதியுடன் ஒன்றிணைய வேண்டும். பன்னாட்டு நிலைத்தத் தன்மையின் கவலைக்குரிய சூழல் அச்சத்தை ஏற்படுத்துவதால் சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் மக்கள் அனைவரும் வாழ வேண்டும்.”

- நவம்பர் 25, பிரான்ஸ் நாட்டிற்கான செய்தி

நம்மைத் தனிமைப்படுத்துகின்ற, அந்நியப்படுத்துகின்ற, ஒருவரின் சொந்த நலன்களுக்குள் வாழ்க்கையை மூடுகின்ற, அண்டை வீட்டாரிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நம்மைத் தூரமாக்குகின்ற மனநிலைக்கு எதிரான எதிர்ப்பாக இக்கால நற்செய்தி அறிவிப்புப் பணி செயல்பட வேண்டும்.”

- நவம்பர் 24, திருப்பீடத்துறையின்  மாநாட்டிற்கான செய்தி

முன்மதி, எளிய மனம், தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் வாழ கத்தோலிக்க வார இதழ்கள் உதவுகின்றன. அறிவுப்பூர்வமான பார்வையை மக்களின் வீடுகளுக்குள் கொண்டு வருகின்றன, மனித பார்வையுடன் மனித இதயங்களை உருவாக்கும் நோக்கில் ஒரு கிறிஸ்தவ பார்வையையும் மக்களிடத்தில் வெளிப்படுத்துகின்றன.”

- நவம்பர் 24, இத்தாலிய கத்தோலிக்க வார ஆசிரியர்களுக்கான செய்தி

Comment