No icon

 திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள்,  மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

 “ஊழல் மோகம் மிகவும் ஆபத்தானது. அதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு செயலிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை, உறுதி, விவேகம் மற்றும் இரக்கம் தேவை.”

- டிசம்பர் 11, வத்திக்கான் அலுவலக ஊழியர்களுக்கான செய்தி

அமைதி மற்றும் நிதானம் என்பது வார்த்தைகளில், செயல்பாடுகளில், பயன்படுத்தும் பொருள்களில், ஊடகங்களில், சமூகத் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் நற்பண்புகளோ, ஒறுத்தல்களோ அல்ல; மாறாக, அவை கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத கூறுகள்.”

- டிசம்பர் 10, ஞாயிறு மூவேளைச் செப உரை

அமைதியாக இருப்பது எப்படி என்று தெரியாவிட்டால், நல்லவற்றை எடுத்துச் சொல்வது கடினம். எந்த அளவுக்கு அமைதியாக அதிக கவனத்துடன் இருக்கின்றோமோ அப்போது அந்த அளவுக்கு நமது வார்த்தை அதிக வலிமையாக இருக்கும்.”

- டிசம்பர் 10, ஞாயிறு மறையுரை

நமது வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும் கிறிஸ்து பிறப்பை எடுத்துரைக்கும் ஒவ்வொரு குடிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் நிகழ்ந்தவற்றை நமக்கு நினைவூட்டுவதோடு, நன்றியுணர்வு, மென்மை, செபம், சில நேரங்களில் கண்ணீர் போன்றவற்றை நம்மில் வரச் செய்கின்றது.”

- டிசம்பர் 9, வத்திக்கானில் குடில்கள் அமைப்போருக்கான செய்தி

அன்னை மரியாவைப்போல் இறைவனின் கொடைகள் குறித்து வியந்து, அதன் மதிப்பைப் பாராட்டி, அக்கொடைகளோடு இணைந்து வரும் நம்பிக்கை மற்றும் கனிவு குறித்து மகிழ்ந்து ஏற்பதே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.”

- டிசம்பர் 8, அமல அன்னை திருவிழா செய்தி

திரு அவையும், பொதுச்சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. இவை இரண்டிற்குமிடையே  எந்த முரண்பாடுகளும் இருக்க முடியாது. ஏனென்றால், இவை இரண்டும் தனி மனிதர் மற்றும் சமூகத்தின் நன்மைக்குப் பங்களிக்கின்றன.”

- டிசம்பர் 7, புனித பவுல் தேசிய கழகத்தினருக்கான உரை

Comment