திருத்தந்தையின் முழக்கம்
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
“போர் எப்போதும் தோல்விதான் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அழிவைத் தருகின்ற, முடிவற்ற, பயனற்ற, பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தராத இப்போரினால் நாம் சோர்வடைகின்றோம். எனவே, நமது செபம் பயனுள்ளது என்பதை உணர்ந்து, சோர்வடையாமல் தொடர்ந்து அமைதிக்காகச் செபிப்போம்.”
- பிப்ரவரி 18, ஞாயிறு மூவேளைச் செப உரை
“இயேசுவைப் போல நாமும் அமைதி, உள்ளார்ந்த உலகத்திற்குள் செல்லுதல், இதயத்தின் குரலுக்குச் செவிசாய்த்தல், உண்மையுடன் தொடர்பு கொள்ளுதல் என்னும் பாலைவனத்திற்குள் நுழைய இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம்.”
- பிப்ரவரி 18, ஞாயிறு மறையுரை
“நம்மைப் பாதுகாத்துப் பராமரிக்கும் இயேசுவின் அன்பு, நம் காயங்களைக் குணப்படுத்தும் அவரது இரக்கம், நம் இதயங்களை மகிழ்ச்சிக்குத் திறக்கும் தூய ஆவி போன்றவை இறைவன் நமக்களித்துள்ள கொடைகள்! இறைவனின் இத்தகைய கொடைகளால் நிரப்பப்பட்ட நாம், அந்தக் கொடைகளைப் பிறருக்கு வழங்கவும், நமக்கே நாம் கொடைகளாக இருக்கவும் அழைக்கப்படுகிறோம்.”
- பிப்ரவரி 17, திருத்தந்தையின் ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி
“ஒப்புரவு அருடையாளம் என்பது உயிர்ப்பின் அருளடையாளம்; ஏனெனில், அது தூய்மையான, கலப்பற்ற கருணையாகும். மேலும், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள், இரக்கத்தின் இனிமையை அறிவிப்பவர்களாகச் செயல்படவேண்டும்.”
- பிப்ரவரி 16, தவக்காலத் திருப்பயணிகளுக்கான செய்தி
“அருள்பணித்துவத்திற்கான பயிற்சி என்பது ஒரு கட்டுமான இடத்தைக் குறிப்பதாகும். இங்கு நாம் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில், இறையருளுடன் நம் பலவீனங்களிலும், பணியின் மகிழ்விலும் இறைவனின் கனிவைக் கண்டுகொள்ள முடியும்.”
- பிப்ரவரி 15, நேப்பிள்ஸ் குருமாணவர்களுக்கான செய்தி
Comment