திருத்தந்தையின் முழக்கம்
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
“பெண்களுக்கு உறுதியான சம மாண்பும், மரியாதையும் கிடைக்கப்பெற நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. மனித மாண்பினை உறுதிப்படுத்துதல், பாதுகாத்தல், கொடையாம் வாழ்க்கையை வரவேற்றல் போன்றவற்றைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.”
- மார்ச் 10, ஞாயிறு மூவேளை செப உரை
“இயேசு நம்மைத் தீர்ப்பிட வரவில்லை; மாறாக, உலகை மீட்பதற்காகவே வந்தார். பிறரைப் பற்றித் தவறாகப் பேசும்போது, புறணிகளை எடுத்துரைக்கும் போதெல்லாம் நாம் பிறரைத் தீர்ப்பிடுகின்றோம்.”
- மார்ச் 10, ஞாயிறு மறையுரை
“மக்களின் நிலையைப் பற்றி சிந்திப்பவர்கள், பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், அமைதிக்காகத் தங்கள் குரலை உயர்த்துபவர்கள் அனைவரும் துணிச்சல் மிக்கவர்கள். போர் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்த வெட்கப்பட வேண்டாம்.”
- மார்ச் 9, சுவிட்சர்லாந்து வானொலிக்கான நேர்காணல்
“கடவுள் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாதவர்; மாறாக, நாம்தான் மன்னிப்பதில் சோர்வடைகின்றோம்.”
- மார்ச் 8, 24 மணிநேர ஒப்புரவு வழிபாட்டில் ஆற்றிய மறையுரை
“இவ்வுலகைப் பாதுகாத்து, உயிர்த் துடிப்புடையதாக ஆக்கவும், வாழ்வை ஒரு கொடையாக மாற்றவும் தேவையான சக்தியை பெண்கள் கொண்டிருக்கிறார்கள்.”
- மார்ச் 8, உலகப் பெண்கள் தினத்திற்கானச் செய்தி
Comment