No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பெண்களின் மாண்பு மதிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டு நிலைகள் அகற்றப்பட இம்மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்வோம்.”

- ஏப்ரல் 3, ஏப்ரல் மாதத்திற்கான இறைவேண்டல் கருத்து

இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது, மரணத்தின் மீது வாழ்க்கையின் வெற்றி, விரக்தியின் மீது நம்பிக்கையின் வெற்றி.”

- ஏப்ரல் 2, திருப்பயணிகளுக்கான இறைச்செய்தி

உயிர்த்த ஆண்டவர் நம்மை இருளிலிருந்து ஒளிக்குக் கொண்டு வருபவர், எப்போதும் நம்முடன் அன்பால் பிணைக்கப்படுபவர், பாவம் மற்றும் மரணத்தின் படுகுழியில் இருந்து நம்மை விடுவித்து, மன்னிப்பு மற்றும் என்றுமுள்ள இறைவனின் ஒளிமயமான வாழ்விற்குள் நம்மை ஈர்ப்பவர்.”          

- மார்ச் 31, ஞாயிறு மறையுரை

இயேசு நமக்கு வாழ்வின் கதவுகளைத் திறந்துவிடுகிறார். நாமோ தொடர்ந்து, உலகம் முழுவதும் போர்களைப் பரவவிட்டு, அக்கதவுகளை மூடிவருகிறோம்.”

- மார்ச் 31, திருத்தந்தையின்ஊர்பி எத் ஓர்பி’(உலகோருக்கான) செய்தி

என் அன்பான சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களைத் தனியாக விடமாட்டோம். இறை வேண்டல் மற்றும் பிறரன்புப் பணிகள் வழியாக நாங்கள் உங்களுடன் இணைந்திருக்கின்றோம்.”

- மார்ச் 27,  புனித பூமி மக்களுக்கான செய்தி

Comment