No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

நற்செய்தியைப் படிப்பதும், அதனைத் தியானிப்பதும், அதுகுறித்து அமைதியாகச் செபிப்பதும், நல்ல வார்த்தைகளைச் சொல்வதும் கடினமான செயல்கள் அல்ல; நாம் அனைவரும் இதனை எளிதாகச் செய்ய முடியும்.”

- மே 19, ஞாயிறு மூவேளைச் செபவுரை                                                         

திருத்தூதர்களைப் போலவே நாமும் அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்படுகிறோம். ஆணவம், திணிப்புகள் அல்லது கணக்குப் பார்த்துச் செயல்படுவதை விடுத்துதூய ஆவியார் நம் இதயங்களில் நமக்குக் கற்பிக்கும் உண்மையின் விசுவாசத்தால் பிறந்த ஆற்றலுடன் நாம் இந்த நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்ய வேண்டும்.”

- மே 19, ஞாயிறு மறையுரை

ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள். யார் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று சண்டையிடாமல், ஒருவரையொருவர் நேசிக்கவும், ஒன்றாக வளரவும் முயற்சி எடுங்கள்.”

- மே 18, வெரோனா நகர் இளையோருக்கான செய்தி

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது நம்மை ஒருபோதும் ஏமாற்றமடையச் செய்யாது. அது கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதனாலும், யாராலும் பிரிக்க முடியாது என்ற உறுதியை அடிப்படையாகக் கொண்டது.”

- மே 17, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

அனைத்துச் சுயநலன்களும் நியாயமற்றவை; அவை நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் ஓர் அமைப்பாக மாறும்போது, நமது சொந்த நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அது மோதலுக்கான கதவுகளைத் திறக்கிறது.”

- மே 16, கத்தோலிக்க இறைமக்களுக்கான செய்தி

 

Comment