No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

“மனிதகுலம் தற்போது ஒரு சவாலான ஆற்றல் மாற்றத்தை எதிர் கொள்கிறது; அம்மாற்றம் எவ்வகையிலும் மனித ஆற்றலைக் கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது. உண்மையில் நாம் தொழில்நுட்ப அதிகாரத்திற்குச் சரணடைகிறோமா? அல்லது மனித ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமா? என்று நமக்குள்ளே கேள்வியெழுப்ப வேண்டும்.”

- ஜூன் 22, உரோமையில் நடந்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான செய்தி

“திருவிவிலியம் என்பது கடவுள் நமக்கு ஆற்றியுள்ள வியத்தகு செயல்களை நமக்கு மீண்டும் எடுத்துரைத்து, கிறிஸ்தவ வாழ்வின் உண்மை அர்த்தமாக இருக்கும் இறைவனுடன் ஆழமான அன்புறவைப் புதிதாகச் சுவைக்க வைத்து நம் விசுவாச ஊனங்களைக் குணப்படுத்துகிறது.”

- ஜூன் 25, திருத்தந்தையின் ‘எக்ஸ்’ தளப் பதிவு

“தூய ஆவியானவர், ஆட்சியாளர்களின் மனங்களை அறிவூட்டட்டும்; அவர்களுக்கு ஞானத்தையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்தட்டும்; மோதலைத் தூண்டும் எந்தவொரு செயலையும் வார்த்தையையும் அவர்கள் தவிர்த்து, அதற்குப் பதிலாக அமைதியான தீர்வை எட்ட வழிகாட்டட்டும்.”

- ஜூன் 23, ஞாயிறு மறையுரை

“கடவுளின் திருவுளத்தை மனத்தாழ்மையுடனும், துணிவுடனும் ஏற்றுக் கொண்ட கன்னி மரியா, கடினமான தருணங்களில், இறைவனோடு இணைந்து செயல்பட்டார். புயல் வரும்போதும், கொந்தளிப்பு வந்தாலும், இறைவனை விட்டுப் பிரியாதவர் அன்னை மரியா.”

- ஜூன் 23, மூவேளைச் செபம்

“உங்கள் நம்பிக்கைகளில் எப்போதும் உண்மையாக இருங்கள். மற்றவர்கள் உங்களைத் துன்புறுத்துவதால் உங்கள் அடையாளத்தை உண்மையாகப் பிடித்து, துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவத் தியாகிகளைப் போல வலுவாக இருங்கள்.”

- ஜூன் 20, ஆசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான செய்தி

Comment