No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

 “ஒருவரையொருவர் சகோதரர்களாக வரவேற்க இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். ஆகவே, பிறரைத் திறந்த மனத்துடன் வரவேற்க அழைக்கப்படுகின்றோம். ஏனெனில், நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்கள்.”

- ஜூன் 26, பொலோக்னா நகரில் உள்ள மசூதியின் உறுப்பினர்களுக்கான செய்தி

பல ஆண்களும், பெண்களும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தின் கைதிகளாக இருக்கும் இவ்வேளையில், திரு அவை எப்போதும், எல்லா இடங்களிலும் இயேசு கிறிஸ்துவை நமது நம்பிக்கை என்று அறிவிக்கும் பணியைக் கொண்டுள்ளது.”

- ஜூன் 28, கிறிஸ்தவ ஒன்றிப்புச் சபையின் தலைமை இல்ல உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும், தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் பவுல் மாற்றம் கண்டபோதும், அங்கே நற்செய்தி அறிவிப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன. அவைகள், ஒரு புதிய வாழ்க்கையின் கதவுகள் ஆகும்.”

- ஜூன் 29, பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவின் மறையுரை செய்தி

உடல் மற்றும் உள்ள வேதனைகள், ஆன்மாவின் காயங்கள், நம்மை நசுக்கும் சூழ்நிலைகள் மற்றும் பாவங்கள் முன்னிலையில் கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை, நம்மைத் தொட்டுக் குணப்படுத்த தயங்குவதில்லை, நாம் அவரைத் தொட அனுமதிக்கின்றார்.”

- ஜூன் 30, ஞாயிறு மூவேளைச் செப உரையின் செய்தி

செபம் என்பது நமது வாழ்க்கையை உந்திச்செல்ல வைக்கும் ஆற்றல் பெற்றது. நமது சொந்த ஆற்றல் கொண்டு நம்மால் தொலைதூரத்திற்குச் செல்ல முடியாது. ‘நாம்தான்என்று நினைத்தோமானால், நாம் விரைவில் தோல்வியடைவோம்.”

- ஜூலை 01, ‘எக்ஸ்தளப் பதிவு செய்தி

Comment