திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:
“உர்பான் பல்கலைக்கழகம் அறிவையும் திறமைகளையும் அனுபவங்களையும் பகிரும் இடமாக மட்டும் இல்லாமல், ஒழுக்கம் மற்றும் பன்முகத்தன்மையுடைய இவ்வுலகில் நற்செய்தியை அறிவிப்பதற்கு உதவும் வகையிலான அறிவுசார் நுட்பங்களை வழங்கும் இடமாகவும் செயல்பட வேண்டும்.”
- ஆகஸ்டு 30, உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் செய்தி
“மோதல்கள் மற்றும் வன்முறைகள் நிலவுகின்ற இக்காலங்களில் உதவி, மரியாதை, பகிர்வு ஆகியவற்றில் அலட்சியம் மற்றும் சுயநலம் மேலோங்கி இருப்பதாகத் தோன்றும் இக்காலத்தில் துறவிகளின் சாட்சிய வாழ்வு பாராட்டத்தக்கது.”
- ஆகஸ்டு 31, கப்பூச்சியன் துறவு சபையின் 86-வது பொதுப்பேரவை வாழ்த்துச் செய்தி
“வீட்டில் விளக்கை ஏற்றும்போது, அந்தச் செயல் பல மின்சாரப் பணியாளர்களின் உழைப்பு, அவர்களின் அறிவாற்றல், நிபுணத்துவம் மற்றும் தியாகத்தால் வந்தது என்ற நன்றியுணர்வுடன் நாம் வாழ வேண்டும்.”
- ஆகஸ்டு 31, 200 மின்சார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சந்திப்புச் செய்தி
“திருநற்கருணை வழிபாட்டில் கடவுள் மீதான அன்பும், அண்டை வீட்டாரின் அன்பும் உண்மையாக ஒன்றுபட்டுள்ளன. ஒரே மனித இனமாக, ஒன்றிணைந்து பயணிப்பவர்களாக இப்பூமியின் குழந்தைகளாக வாழ, திருநற்கருணை அழைப்பு விடுக்கின்றது.”
- ஆகஸ்டு 31, ஈக்வடாரில் நடைபெற உள்ள பன்னாட்டு திருநற்கருணை மாநாட்டிற்கான செய்தி
“தீய எண்ணங்களுடன் திருப்பலிக்குச் சென்று பங்கெடுத்து ஆலயத்திலிருந்து வெளிவரும் மனிதர், எத்தகைய மாற்றத்தையும் பெறுவதில்லை. மாறாக, பிறரைப் பற்றிய இரக்கமற்ற கொடிய அவதூறுகளைத் தொடர்ந்து செய்கின்றார்.”
- செப்டம்பர் 01, ஞாயிறு மூவேளைச் செப உரை செய்தி
Comment