திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:
“நாம் இவ்வுலகில் எந்த அளவு பயனுள்ளவர்களாக இருக்கிறோமோ அதை வைத்துதான் நாம் மதிப்பிடப்படுகிறோம் என்பது உலகப் பார்வை. ஆனால், நாம் கடவுளால் அன்புகூரப்படுகிறோம் என்ற உண்மையை நமக்கு நற்செய்தி நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது.”
- செப்டம்பர் 20, ‘எக்ஸ்’ தளப் பதிவு
“ஒரு நாட்டின் செல்வம் என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்ல; மாறாக, அதன் இயற்கை, கலை, கலாச்சாரம், மதப் பாரம்பரியம், குழந்தைகளின் புன்னகை ஆகியவற்றில் அடங்கியுள்ளது.”
- செப்டம்பர் 21, வத்திக்கானின் பொருளாதார இராணுவ அதிகாரிகளின் 250-வது ஆண்டினை முன்னிட்டுச் செய்தி
“அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றவர்களுக்காகவும், ஏழைகள் மற்றும் பூமியின் அழுகைக்குப் பதிலளிக்கும் வகையில் பொது நன்மைக்காகப் பாடுபடுபவர்களுடனும் நான் இருக்கிறேன்.”
- செப்டம்பர் 22, ஞாயிறு மூவேளைச் செப உரை
“மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு மனப்பான்மைகள், விரோதம் மற்றும் தீவிரவாதத்தைத் தூண்டக்கூடாது, வன்முறையையோ அல்லது இரத்தம் சிந்துதலையோ தூண்டக்கூடாது.”
- செப்டம்பர் 24, அமைதிக்கான சர்வதேசக் கூட்டத்தில் செய்தி
“நம் இறைவேண்டல் சமயத்தில் எழும் ஏனைய பிரச்சினைகளில் இயேசுவின் கேள்விகளை நாம் கண்டுணர்ந்து, நன்மைத் தனத்தை நோக்கி நடைபோடும்போது, ஆழமான அன்பிற்குள் கொண்டு செல்லப்படுகிறோம்.”
- செப்டம்பர் 24, ‘எக்ஸ்’ தளப் பதிவு
Comment