No icon

இயேசுவின் தலைமைப் பண்புகள் - 5

கருணை

இயேசுவின்கருணைஅல்லதுஇரக்கம்’ (Charity) என்பது அவரது எல்லாத் தலைமைப் பண்புகளிலும் இழையோடியிருக்கும்.

இயேசுவே கருணை! இயேசுவே இரக்கம்! இயேசுவையும், இரக்கத்தையும் பிரிக்க முடியாது. நற்செய்தியில், ‘இயேசு கருணையுடன் நோக்கினார்; பரிவுடன் இரக்கம் கொண்டார்’  எனப் பல இடங்களில் படிக்கிறோம்.

இயேசுவைத் தலைவராகக் கொண்டிருக்கும் நாமும், நம் இருப்பும் இரக்கமாக இயக்கப்பட வேண்டும். நாம் செய்கிற எல்லா முன்னெடுப்புகளும், கருணையின் சாயலைத் தாங்கி இருக்க வேண்டும்.

காலையில் நிறுவனத்தில் நுழையும் முன், நம்மை வரவேற்கும் நிறுவனக் காவலருக்குப் புன்முறுவலுடன் வாழ்த்து சொல்வதில் இருந்து, மாலை வீடு திரும்பும் வரை, நிறுவனத்தில்  நாம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகளில் கருணை நிறைந்திருக்க வேண்டும்.

கருணை, இரக்கம் என்பது பரிதாபப்படுவது அல்ல; மாறாக, ஊழியர்களின் தேவையை நாம் கண்டு, அறிந்து, அதை நிவர்த்தி செய்ய நம்மிடம் என்ன (Resource) இருக்கிறது என்பதை அறிந்து, அதை முழுமையாகப் பயன்படுத்துவதில், முழு ஈடுபாடு கொள்வதே கருணையின் முழுமை. இது தான்Charityஎன்ற மதிப்பீட்டின் அர்த்தம்.

இயேசு மக்கள்மீது கருணை கொண்டார். மக்களின்  பசி என்னும் தேவையை உணர்ந்தார். உணவு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார். தமது சீடர்களிடம் என்ன இருக்கிறது? (Resource) என்று கேட்டார். இருப்பதை வைத்து, அதை முழுமையாகப் பயன்படுத்தினார். அந்த நிகழ்வில் இயேசுவின் ஈடுபாடு, சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற மனவுறுதி, Resource பயன்பாடு, Team work, கடவுளுக்கு நன்றி சொல்லிச் செயலாற்றியது - இவைகள்  இரக்கத்தின் விளைவே. அதனால், ஐந்து  அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளும் பலுகிப் பெருகின. அவர் நிகழ்த்திய அத்தனை புதுமைகளும், அவரது இரக்கத்தின் ஊற்றில் இருந்து பெருக்கெடுத்தவை. இதுதான்Charityஎன்ற தலைமைத்துவம்.

மற்றவர்களின் தேவை அறிவு, அது பிறருக்கு அளிக்கும் பயிற்சியாக இருக்கலாம்; பணி வளர்ச்சியாக இருக்கலாம். குடும்பப் பிரச்சினை செயல்பாட்டுக்குத் தடையான விசயங்கள் - இப்படி நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களின்  பல தேவைகள். அவற்றையெல்லாம் ஏனோதானோவென்று செய்து முடிகின்ற  மனப்பான்மையா? பரிவுடன் கூடிய, மிகவும் சிறப்பானதைக் கொடுக்கக் கூடிய மனப்பான்மையா? எந்த மனப்பான்மை நம்மிடம் உள்ளது?

இயேசுவைத் தலைவனாகக் கொண்டவன் சிந்திக்க வேண்டிய விசயம் இது.

Charityஎன்ற தலைமைத்துவம் நம் இதயம் போன்றது. அது தொடர்ந்து இயங்க வேண்டும்.  

(முற்றும்)

Comment